ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து, பெட்ரோல் டீசலின் விலை உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் தேமுதிக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பூட்டுத்தாக்கு நித்யா தலைமை தாங்கினார், மாவட்ட பொருளாளர் டாக்டர் சரவணன் வரவேற்றார், இதில் சிறப்பு அழைப்பாளராக இளைஞர் அணி மாநில துணைச்செயலாளர் சுதிஷ் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார் .

மேலும் இதில் தொகுதி பொறுப்பாளர் தக்ஷிணாமூர்த்தி ஜமாலுதீன் முத்தமிழன் மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்