ராணிப்பேட்டை மாவட்டம்
வாலாஜாபேட்டை டோல்கேட் விரிவாக்க பணிக்காக 236 நபர்களிடமிருந்து 2016 ஆண்டு தேசிய நெடுஞ்சாலையின் இரு புறங்களிலுள்ள 22 ஏக்கர் நஞ்சை புஞ்சை வீட்டுமனை உள்ளிட்டவைகளை நில கை எடுப்பு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.

இதில் ஒரு சதுர அடி நிலத்திற்கு 2500 ரூபாய் என வழங்கப்படுமென நில உரிமை தாரர்களுக்கு அறிக்கையினை வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் 236 பேர் நில உரிமை தாரர்களுக்கு மொத்தமாக 449 கோடி ரூபாய் தொகையினை வழங்க வேண்டியுள்ளது.
இந்தநிலையில் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட தொகையினை வழங்கப்படாமல் காலதாமதம் ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நில உரிமை தாரர்களுக்கு வழங்கக்கூடிய தொகையினை குறித்து ஆலோசனை கூட்டமான தேசிய நெடுஞ்சாலையின் நில எடுப்பு பிரிவு மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் தலைமையில் ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது.

இந்த கூட்டத்தின்போது 2016ஆம் ஆண்டு நில உரிமையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட நிலத்திற்கு ஒரு சதுர அடிக்கு ரூ , 2, 500 என குறிப்பிடப்பட்டுள்ளது தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்து. ஒரு சதுர அடிக்கு ரூபாய் 150 முதல் 250 ரூபாய் வரை மட்டுமே கிடைக்கும் என தேசிய நெடுஞ்சாலை துறை நில எடுப்பு பிரிவு மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் தெரிவித்ததால் நிலம் வழங்கிய உரிமைதாரர்கள் அதிர்ச்சி அடைந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் தங்களது நிலைத்தினை திரும்ப தரக் கோரியும் நெடுஞ்சாலைத் துறைக்கு தங்களது நிலத்தினை வழங்க மாட்டோம் என கூறிக்கொண்டு வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் நில உரிமை தாரர்கள் ஒன்று திரண்டு வாலாஜா டோல்கேட் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திச் சென்றனர் இந்த தகவலை அறிந்த ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பூரணி மற்றும் காவல்துறையினர் நில உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டு நில உரிமையாளர்கள் கலைந்து சென்றனர்