தேசிய திறனாய்வு தேர்வில்‌ வெற்றி பெற்ற பென்னகர்‌ அரசு மேல்நிலை பள்ளி 8ம்‌ வகுப்பு மாணவி சந்தியாவிற்கு தலைமையாசிரியர்‌ விஜயகுமார்‌ பரிசு வழங்கி பாராட்டினார்‌.

கலவை, தேசிய திறனாய்வு தேர்வில்‌ கலவை அடுத்த பென்னகர்‌ அரசினர்‌ மேல்நிலைப்‌ பள்ளியில்‌ 8ம்‌. வகுப்பு படிக்கும்‌ மாணவி மே.சந்தியா கலந்து கொண்டு. தேர்வு எழுதி வெற்றி பெற்றார்‌.

'தேர்வில்‌ வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு விழா பள்ளியில்‌ நேற்று நடந்தது. விழாவிற்கு தலைமையாசி ரியர்‌ விஜயகுமார்‌ தலைமை தாங்கி மாணவிக்கு பரிசு வழங்கி பாராட்டினார்‌. 

இதில்‌ பெற்றோர்‌ ஆசிரியர்‌ கழகத்தினர்‌. சமூக ஆர்வலர்கள்‌ உட்பட ஆசிரியர்கள்‌. பலர்‌ கலந்து கொண்டனர்‌. முடிவில்‌. சமூக ஆர்வலர்‌ கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்‌.