ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கிழவனம் கிராமம் தோப்பு தெருவைச் சேர்ந்தவர் கவியரசன் (29). இவரது மனைவி காஞ்சனா (25). இவர்களது மகன் யோகித்(4). இந்நிலையில், நேற்று காலை கவியரசனின் தந்தை பலராமன் மாடுகளை மேய்ச்சலுக்காக கிழவனம் ஏரிப்பகுதிக்கு ஓட்டிச்சென்றார்.

அவருக்கு தெரியாமல் கவியரசன் மகன் யோகித் தனது தாத்தாவை பின் தொடர்ந்து சென்றபோது கிழவனம் ஏரி பகுதியில் மணல் கடத்தல்காரர்களால் ஆங்காங்கே ஏற்பட்ட பள்ளத்தில் சிறுவன் யோகித் தவறி விழுந்து நீரில் மூழ்கினார். சிறிது நேரம் கழித்து இதை கவனித்த பொதுமக்கள் சிறுவனை மீட்டு திருத்தணியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே யோகித் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அரக்கோணம் கிராமிய காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.