ஆற்காடு; வேலூர் மாவட்டம், சேர்க்காடு செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (50), சலவைத் தொழிலாளி. இவருக்கு பிரேமா என்ற மனைவியும் பாலச்சந்திரன் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். 

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நக்கீரன் தெருவைச் சேர்ந்தவர் பேபி (50). பழ வியாபாரி. இவரது கணவர் கோபி ஏற்கனவே இறந்துவிட்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் பேபிக்கும், முருகனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் முருகன், பேபியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டனர். 

தொடர்ந்து இருவரும் பல ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் 27ம் தேதி முருகனுக்கும், பேபிக்கும் சொத்து பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பேபி ஆபாசமாக பேசி அங்கிருந்த பீர் பாட்டிலால் முருகனின் தலையில் அடித்தார். 

இதில் மண்டை உடைந்து படுகாயம் அடைந்த முருகனை அக்கம்பக்கத்தினர் மீட்டு வேலூர் தனியார் மருத்துமனையில் சேர்த்தனர். இதுகுறித்து முருகனின் மகன் பாலச்சந்திரன் ஆற்காடு டவுன் போலீசில் நேற்று புகார் செய்தார். 

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பேபியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.