ராணிப்பேட்டை மாவட்டம் பாணவரம் ரயில் நிலையத்தில் ரயில் மூலம் வெளி மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக மாவட்ட உணவுப் பொருட்கள் தடுப்பு பறக்கும் படை தாசில்தார் இளஞ்செழியனுக்கு நேற்று ஒரு தகவல் ஒன்று கிடைத்தது.

அதன்பேரில் நேற்று முன்தினம் மாலை தாசில்தார் இளஞ்செழியன் தலைமையிலான அதிகாரிகள் ரயில் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர் அப்போது லால்பாக் எக்ஸ்பிரஸில் ஆந்திரா கர்நாடகவுக்கு ரேஷன் அரிசி பொருட்கள் கடத்தி செல்வதற்காக பிளாட்பாரத்தில் தயாராக வைத்திருந்த 15 மூட்டை ரேஷன் அரிசி பொருட்கள் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் அதனை வாலாஜா நுகர்வோர் வானிப கிடங்கில் ஒப்படைக்க தாசில்தார் உத்தரவிட்டார் இதில் ரேசன் அரசி கடத்தலில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது இது விரைந்து நடவடிக்கை எடுத்து விசாரணை நடத்தப்படும்.