வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்திற்க்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மாவட்ட ஆட்சியர் பங்களாவில் வேலை செய்யும் பெண் ஒருவருக்கு தொற்று உறுதி ஆகியுள்ளது. கடந்த ஒரு வாரமாக ஆட்சியர் பங்களாவிலேயே, தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் இன்று கொரோனா பரிசோதனை செய்துள்ளார். பரிசோதனையின் முடிவில் ஆட்சியருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.