34 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டது. புதிய அமைச்சரவை நாளை பதவியேற்கிறது.

 
தமிழக சட்டமன்ற தேர்தலில் 159 இடங்களில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதில் 125 இடங்களில் தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதுதவிர, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணி கட்சிகளின் கணக்கையும் சேர்த்தால் தி.மு.கவின் பலம் 133 ஆக உள்ளது.

இதையடுத்து நாளை 34 பேர் கொண்ட புதிய அமைச்சரவையுடம் மு.க.ஸ்டாலின் நாளை ஆளுநர் மாளிகையில் மிக எளிமையாக பதவியேற்கிறார்.
புதிய அமைச்சரவைக்கான பட்டியலை கவர்னரின் பார்வைக்கு மு.க.ஸ்டாலின் அனுப்பியதையடுத்து அமைச்சரவையில் இடம் பெறும் அமைச்சர்களின் பெயர் பட்டியல் கவர்னர் மாளிகையில் இருந்து வெளியாகியுள்ளது. 

அதன்படி
முதல்வர் மு.க.ஸ்டாலின்: இந்திய ஆட்சிப் பணி, காவல், சிறப்புத் திட்ட செயலாக்கம்

எ.வ.வேலு : பொதுப்பணித்துறை

துரைமுருகன் : நீர்வளத்துறை

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் : வேளாண் மற்றும் விவசாயிகள் நலன்

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் : வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை

தங்கம் தென்னரசு : தொழில்துறை

அன்பில் மகேஷ் பொய்யாமொழி : பள்ளிக்கல்வித்துறை

மா.சுப்பிரமணியன் - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை,

பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன் :நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை,

நாசர் : பால்வளத்துறை

 மூர்த்தி - வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு,

சிவசங்கர் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை,

சேகர் பாபு - இந்து சமய அறநிலையத்துறை

கே.என்.நேரு : நகர்ப்புற வளர்ச்சித்துறை

மு.பெ.சாமிநாதன் - செய்தி விளம்பரத்துறை,

கீதா ஜீவன் - சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை,

அனிதா ராதா கிருஷ்ணன் - மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை,

ராஜ கண்ணப்பன் - போக்குவரத்து

ராமச்சந்திரன் - வனத்துறை,

சக்கரபாணி - உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்,

செந்தில் பாலாஜி - மின்சாரம், மதுவிலக்கு,

காந்தி - கைத்தறி மற்றும் துணிநூல் துறை

செஞ்சி மஸ்தான் - சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலன்

ஐ.பெரியசாமி : கூட்டுறவுத்துறை அமைச்சர்

பொன்முடி : உயர்கல்வித்துறை அமைச்சர்

சு.முத்துசாமி :வீட்டுவசதித்துறை அமைச்சர்

தாமோ அன்பரசன் : ஊரகதொழிற்துறை