ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் அருகே உள்ள கல்மேல்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ரபி. இவருக்கு சொந்தமான 40 அடி ஆழ தண்ணீரில்லாத விவசாய கிணற்றில் ஒரு மான் தவறி விழுந்து கிடப்பதை அப்பகுதி மக்கள் நேற்று காலை கண்டனர். 

இதுகுறித்து அவர்கள் ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த நிலைய அலுவலர் அரிகிருஷ்ணன் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று, 1 மணி நேரம் போராடி மானை பத்திரமாக மீட்டனர். 

தண்ணீர் தேடி காட்டில் இருந்து வெளியேறிய மான் கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என தெரியவந்தது. பின்னர் மீட்கப்பட்ட மானை ராணிப்பேட்டை வனஅலுவலர் கந்தசாமி உத்தரவின்பேரில், வனக்காப்பாளர் அனீஷ்குமாரிடம் ஒப்படைத்தனர். 

தொடர்ந்து அந்த மான் அம்மூர் காப்புக்காட்டில் விடப்பட்டது.