ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவல் துறையினர் 1,000 பேருக்கு கரோனா பாதுகாப்பு கவசங்கள் வழங்கும் பணியை காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார் தொடங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் கரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள காவலர்களுக்கு கரோனா பாதுகாப்பு கவசங்களை வாங்க பேரிடர் மேலாண் நிதியில் இருந்து ஒவ்வொரு மாவட்டம் வாரியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு ரூ.3 லட்சம் தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணத்தில் இருந்து ஒவ்வொரு காவலருக்கும் கையுறை, முகக்கவசம், பேஃஸ் ஷீல்ட் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள், காவலர்கள், சிறப்பு காவல் படையினர், ஊர்க்காவல் படையினர் என 1,000 பேருக்கு இந்த பாதுகாப்பு கவசங்கள் வழங்கவுள்ளனர். இதனை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார் காவலர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.