ராணிப்பேட்டை: புதுப்பாடியில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட பழ கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

 
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாசில்தார் காமாட்சி தலைமையிலான வருவாய்த்துறையினர் புதுப்பாடி உள்வட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஆற்காட்டிலிருந்து செய்யார் செல்லும் சாலையின் ஓரத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவை மீறி கடை திறந்து வியாபாரம் செய்யப்பட்டு வந்தது. அங்கு பழக்கடைக்கு ரூபாய் 5 ஆயிரம் அபராதமும் விதித்து எச்சரிக்கை விடுத்தனர்.