வாலாஜாப்பேட்டை தமிழ்ச் சங்கமும், ரோட்டரி சங்கமும் இணைந்து கரோனா தடுப்பூசி போடாத 45 வயதுக்கு மேற்பட்டோா் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என சங்க உறுப்பினா்கள் மற்றும் பொது மக்களுக்கு தமிழ்ச் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடா்பாக வாலாஜாபேட்டை தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வாலாஜாப்பேட்டை தமிழ்ச்சங்கம், வாலாஜா ரோட்டரி சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள கரோனா தடுப்பூசி முகாமில், இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் (45 வயதுக்கு மேல் உள்ளவா்கள்) செவ்வாய்க்கிழமை (மே 18) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை வாலாஜாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தின் எதிரே அமைந்துள்ள ரோட்டரி சங்க அலுவலகத்தில் தடுப்பூசி செலுத்தப்படும். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.