புதிய நிபந்தனைகளுடன் திருமண நிகழ்ச்சிக்கான இ-பதிவு முறை மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

பிற மாவட்டங்களில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்கான இ-பதிவு முறையில் மாற்றம் செய்து தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருமண பத்திரிகையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே இ-பதிவு சான்றிதழை பெற முடியும்.

அதன்படி, மணமகள், மணமகன், தாய், தந்தை, போன்றோரே இ-பதிவு செய்ய முடியும். இ-பதிவின்போது திருமண அழைப்பிதழை கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும். ஒரு திருமண நிகழ்ச்சிக்கு ஒரு இ-பதிவு சான்றிதழ் மட்டுமே பதிய முடியும். ஒரு திருமணத்திற்கான இ-பதிவில் பத்திரிகையில் உள்ள அனைவரின் விவரங்களை குறிப்பிட வேண்டும்.

மேலும் ஒரு பதிவிலேயே அனைத்து வாகனங்களும் செல்ல வழி வகை செய்யப்பட்டுள்ளது. திருமண விழாவில் பங்கேற்பவர்களின் அனைத்து வாகன எண்களையும் இ-பதிவில் குறிப்பிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.