10-ம் தேதி முதல் துவங்கும் முழு ஊரடங்கானது சென்ற காலங்களில் விதித்த ஊரடங்கை விட சிறிய அளவில் மாறானது, எனவே பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள். சமூக வளைத்தலங்களில் பரவி வரும் ஊரடங்கு சம்பந்தமான காவல்துறை அதிகாரிகளின் பழைய உத்தரவு வீடியோ, ஆடியோக்களை நம்ப வேண்டாம் என்றும் தமிழ்நாடு காவல்துறை அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனுமதிக்கப்பட்டவை, அனுமதிக்கப்படாதவை விவரங்களை பிடிஎப் வடிவில் பகிர்ந்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் அறிவிப்பின்படி, கொரோனா நுண்கிருமி தொற்று தடுப்பு நடவடிக்கையாக, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், ஏற்கனவே நடைமுறையில் உள்ள தளர்வுகளுடனும், கூடுதல் கட்டுப்பாடுகளுடனும்
10.05.2021 அன்று அதிகாலை 4 மணி முதல் 24.05.2021 அதிகாலை 4 மணிவரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கின் போது அனுமதிக்கப்படாதவை

* 3000 அதுர அடிக்கு மேல் உள்ள பெரிய கடைகள், வணிக வளாகங்கள் • வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு மற்றும் காய்கறி கடைகள்

* இதர தனி கடைகள்

* கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள அனைத்து தனி கடைகள்

* தங்கும் விடுதிகளில் வணிகம் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக தங்குபவர் தவிர மற்றவர்

* உணவகங்கள், மெஸ், தேநீர் கடைகளில் அமர்ந்து உண்ணும் வசதி சமுக. அரசியல், விளையாட்டு, கேளிக்கை, கல்வி, கலாச்சாரம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்கள் (உள் மற்றும் வெளி அரங்குகள்)

* பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள், கோடைக்கால முகாம்கள்

* சினிமா தியேட்டர்கள்

• உடற்பயிற்சி கூடங்கள்

* மது கடைகள், கேளிக்கை கூடங்கள், மதுக்கூடங்கள்

• பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் • சலூன்கள், அழகு நிலையங்கள்

• சலூன்கள், அழகு நிலையங்கள்

• வெளிநாட்டு விமான போக்குவரத்து

• கோவில் திருவிழாக்கள் வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபாடு
* விளையாட்டு பயிற்சி குழுமங்கள் பொழுதுபோக்கு பூங்காக்கள்

* நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலா தளங்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா அனைத்து நாட்களிலும்

* IT & ITEs நிறுவனங்கள்

* கடற்கரை பகுதி

* தடை செய்யப்பட்ட பகுதிகளில் அனைத்து விதமான நிகழ்வுகள்

* திருமணம், நெருங்கிய சொந்தத்தின் இறப்பு, நேர்முகத்தேர்வு, மருத்துவ அவசரம் (சரியான சான்றிதழ்கள் அவசியம்) தவிர்த்து மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து தடை செய்யப்படுகிறது
முழு ஊரடங்கின் போது அனுமதிக்கப்பட்டவை

• அவசர மருத்துவ சேவைகள்

• விமான நிலையம்/ ரயில் நிலையம் செல்ல மட்டும் ஆட்டோ/ டாக்சி/ தனியார்

* வாகன பயணம்

• பால் விநியோகம்

* செய்தித்தாள் விநியோகம் மருத்துவமனைகள் / மருத்துவ பரிசோதனை

* மருந்தகங்கள்

* ஆம்புலன்ஸ்

* அமரர் ஊர்தி சேவை
கூடங்கள்

* மளிகை, காய்கறி, மீன், இறைச்சி விற்பனை செய்யும் தனி கடைகள் - 50% வாடிக்கையாளர்களுடன் மட்டும் (மதியம் 12 மணி வரை)

• உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் தேநீர் கடைகள் (பார்சல் மட்டும், 12 மணி வரை)

* உணவு விநியோகம், மளிகை, காய்கறி, மீன் மற்றும் இறைச்சி விநியோகம் செய்யும் மின் விநியோக சேவைகள் மட்டும்

* திருமணம் (50 நபர்களுக்கு மிகாமல்) இறப்பு சார்ந்த நிகழ்வுகள் (20 நபர்களுக்கு மிகாமல்)

* தன்னார்வளர்கள், நோயாளிகள், பராமரிப்பாளர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் (உரிய ஆவணங்களுடன் அனுமதி)

* தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து கொண்டிருக்கும் கட்டுமான வேலைகள்/ தொழிற்சாலைகள் (தடை செய்யப்பட்ட பகுதிகளை தவிர)

* சாலையோரம் உள்ள பூ மற்றும் காய்கறி விற்பனை (மதியம் 12 மணி வரைமட்டும்)

• நீதித்துறை மற்றும் நீதிமன்றங்கள்

• வங்கிகள், தானியங்கி பணம் வழங்கும் மையங்கள், காப்பீடு சார்ந்த சேவைகள் (50% அலுவலர்களுடன்)

* பத்திரிக்கை மற்றும் ஊடகத் துறை

* பெட்ரோல் டீசல் பங்குகள்

* சரக்கு வாகனங்கள்

* தொடர்ந்து இயங்கும் தொழிற்சாலைகள்

* அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள்

* தொலைத்தொடர்பு மற்றும் அதைச் சார்ந்த சேவைகள் தரவு மையங்கள் மற்றும் அத்தியாவசியமான தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வசதிகள்

குறிப்பு: வெளிநாடுகள் மற்றும் இதர மாநிலங்களில் இருந்து விமானம் மற்றும் இரயில்கள் மூலம் வரும் பயணிகள் கண்டிப்பாக https://eregister.tnega.org என்ற இணையதளத்தில் பாஸ் எடுக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.