குறள் : 351
பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.
மு.வ உரை :
மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.
கலைஞர் உரை :
நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.
சாலமன் பாப்பையா உரை :
பொய்யானவற்றை மெய் என்று எண்ணும் மயக்கத்தால் இழிவான பிறப்பு வரும்.
Kural 351
Porulalla Vatraip Porulendru Unarum
Marulaanaam Maanaap Pirappu
Explanation :
Inglorious births are produced by the confusion (of mind) which considers those things to be real which are not real
இன்றைய பஞ்சாங்கம்
22-04-2021, சித்திரை 09, வியாழக்கிழமை, தசமி திதி இரவு 11.36 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. ஆயில்யம் நட்சத்திரம் காலை 08.05 வரை பின்பு மகம். சித்தயோகம் காலை 08.05 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
இன்றைய ராசிப்பலன் - 22.04.2021
மேஷம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ எதிலும் சற்று விட்டு கொடுத்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துகளால் வீண் விரயங்கள் ஏற்படும். தொழில் வியாபார ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் கைகூடும் நேரத்தில் தடைகள் ஏற்படலாம். நண்பர்களின் உதவியுடன் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும்.
ரிஷபம்
இன்று வேலையில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகலாம். தொழிலில் சற்று மந்த நிலை இருக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். உறவினர்களின் ஆதரவு கிட்டும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபகாரியங்கள் கைகூடும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தொழில் ரீதியாக லாபம் அதிகரிக்கும், மறைமுக எதிர்ப்புகள் விலகும்.
கடகம்
இன்று பிள்ளைகளால் எதிர்பாராத விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் வீண் பிரச்சினைகள் உண்டாகும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணபற்றாக்குறையை தவிர்க்கலாம். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். எதிர்பாராத உதவிகள் கிட்டும்.
சிம்மம்
இன்று நீங்கள் எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்வீர்கள். பிள்ளைகள் வழியில் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் வெளியூர் பயணங்களால் முன்னேற்றம் அடைவீர்கள். வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் நல்ல லாபம் கிட்டும். சிறப்பான பணவரவால் கடன்கள் குறையும்.
கன்னி
இன்று நீங்கள் எந்த ஒரு செயலிலும் மனக்குழப்பத்துடன் செயல்படுவீர்கள். வெளி பயணங்களால் வீண் அலைச்சல், சோர்வு உண்டாகும். சுப காரிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் சாதகமான பலனை அடையலாம். சிக்கனத்தை கடைபிடித்தால் பணப்பிரச்சினைகள் ஓரளவு குறையும்.
துலாம்
இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் மன மகிழ்ச்சி ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தேவையற்ற செலவுகளை குறைப்பதன் மூலம் சேமிப்பு கூடும். பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். வருமானம் பெருகும்.
விருச்சிகம்
இன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூரிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும்.
தனுசு
இன்று நீங்கள் எடுத்த முயற்சியில் இருந்த தடைகள் விலகி நல்லது நடக்கும். குடும்பத்தில் பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் விலகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்களுடன் சுமூக உறவு உண்டாகும்.
மகரம்
இன்று உங்கள் ராசிக்கு காலை 8.15 மணியிலிருந்து சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை உருவாகும். வியாபார ரீதியான பயணங்களில் அலைச்சலுக்கு பின் லாபம் கிட்டும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
கும்பம்
இன்று உறவினர்கள் வருகையால் சுபசெலவுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். பெரிய மனிதர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய வண்டி வாகனம் வாங்கும் எண்ணம் எளிதில் நிறைவேறும்.
மீனம்
இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் நற்பலன்களை தரும். திருமண சுப முயற்சிகளில் முன்னேற்ற நிலை ஏற்படும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வங்கி சேமிப்பு உயரும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,