குறள் : 336
நெருந லுளனொருவன் இனறில்லை என்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு

மு.வ உரை :
நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமைஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.

கலைஞர் உரை :
இந்த உலகமானது, நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற அகந்தையைப் பெருமையாக் கொண்டதாகும்.

சாலமன் பாப்பையா உரை :
நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது இவ்வுலகம்.

Kural 336
Nerunal Ulanoruvan Indrillai Ennum
Perumai Utaiththuiv Vulaku

Explanation :
This world possesses the greatness that one who yesterday was is not today



இன்றைய பஞ்சாங்கம்
07-04-2021, பங்குனி 25, புதன்கிழமை, ஏகாதசி திதி பின்இரவு 02.29 வரை பின்பு தேய்பிறை துவாதசி. அவிட்டம் நட்சத்திரம் பின்இரவு 03.33 வரை பின்பு சதயம். பிரபலாரிஷ்ட யோகம் பின்இரவு 03.33 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. ஏகாதசி. பெருமாள் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00 

இன்றைய ராசிப்பலன் - 07.04.2021

மேஷம்
இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன் வசூலாகும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும்.

ரிஷபம்
இன்று நீங்கள் சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். மாணவர்களின் படிப்பில் சற்று மந்தநிலை காணப்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்ப-டலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

மிதுனம்
இன்று நீங்கள் பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு பகல் 03.00 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் தாமதப் பலன் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை மதியத்திற்கு பிறகு செய்வது உத்தமம்.

கடகம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு பகல் 03.00 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் பேசும் பொழுது வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பயணங்களில் கவனம் தேவை.

சிம்மம்
இன்று உங்களுக்கு காலையிலே வியத்தகு செய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும்.

கன்னி
இன்று வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பிள்ளைகளுடன் வீண் மனஸ்தாபங்கள் உண்டாகும். உறவினர்களின் உதவியால் பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். நண்பர்களின் சந்திப்பு ஆறுதலை தரும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமின்றி கிடைக்கும்.

துலாம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்படலாம். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. அலுவலகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அவர்களின் ஆதரவை பெற முடியும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு கிட்டும்.

விருச்சிகம்
இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு உழைப்பிற்கேற்ப நற்பலன்கள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். நவீன பொருட்களை வாங்குவீர்கள்.

தனுசு
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலப் பலன்கள் உண்டாகும்.

மகரம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிட்டும். வருமானம் பெருகும்.

கும்பம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். தொழில் ரீதியாக சில தடைகள் இருந்தாலும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். கடன்கள் ஓரளவு குறையும். 

மீனம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,