வேலூர் மாவட்டம் கே வி குப்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லத்தேரி கிராமத்தில் பஸ் நிலையம் அருகே பட்டாசு கடை ஒன்று உள்ளது. இதில் புதிதாக வரும் நபர் பட்டாசுகளின் மாடல்களை எடுத்துத் தருவதாகக் காண்பித்தபோது எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டதாக அக்கம்பக்கத்தினர் கூறினார்கள்.

தகவலறிந்து லத்தேரி காவல் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது உடனே தீயணைப்பு துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது தீயணைப்பு துறையினர் விரைந்துவந்து தீயை அணைத்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த கோர விபத்தில், கடை உரிமையாளர் மோகன் ரெட்டி மற்றும் அவரின் பேரக்குழந்தைகள் இருவர் என 3 பேர் உயிரிழந்தனர்.