ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி தொழிலாளி பலியானார்.

ராணிப்பேட்டையை அடுத்த மாந்தாங்கல் பகுதியில் இயங்கி வரும் ஆல்வின் பிரைம் டேனரி தனியார் தோல் தொழிற்சாலையில் அல்லிகுளம் அருந்ததி பாளையம் பகுதியை சேர்ந்த பழனி (45) என்பவர் இரவு பணியின் போது விஷவாயு தாக்கி தொழிலாளி பலியானார். இச்சம்பவம் குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.