சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைப்பு அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் தெரிவித்துள்ளார்.

இன்று முதல் புதிய நிதியாண்டு துவங்குகிறது. இதைத்தொடர்ந்து சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 4%ல் இருந்து 3.5% ஆக குறைக்கப்படுவதாக நேற்று மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இதையடுத்து இந்த அறிவிப்புக்கு நாடுமுழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அரசியல் தலைவர்கள், பொருளாதார வல்லுநர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சமூக வலைதளங்களில் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசை பலரும் விமர்ச்சித்தனர்.

இந்நிலையில் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைப்பு அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் ஏற்கெனவே இருந்த வட்டி விகிதம் தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.