வேலூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் கம்பங்கள்

வேலூர் மாநகராட்சியில் 16 இடங்களில் வைபை , கேமரா வசதியுடன் ஸ்மார்ட் கம்பங்கள் அமைக்கப்பட உள்ளது . 

வேலூர் மாநகராட் சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் பஸ்நிலையம் , கோட்டை அழகு படுத்துதல் , ஸ்மார்ட்பூங்கா , ஸ்மார்ட் சாலை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது . 

அதேபோல் மாநகராட்சியில் 16 இடங்கள் தேர்வு செய்து , அந்த இடங்களில் கண்காணிப்பு கேமரா , வைபை வசதி , ஒலிபெருக்கி ஆகியவை அடங்கிய ஸ்மார்ட கம்பங்கள் வைக்கப்பட உள்ளது . 

இந்த ஸ்மார்ட் கம்பங்கள் மூலம் வைபை வசதியை பொதுமக்கள் இலவசமாக பெற முடியும் . ஒலி பெருக்கியில் சாலை விதி முறைகள் அவ்வப்போது , ஒலிக்கச்்செய்து , பொதுமக்களை வழிநடத்துதல் போன்றவை மேற்கொள்ளப்படும் .

இதற்காக வேலூர் மாநகராட்சிக்கு ஸ்மார்ட் கம்பங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் கம்பங்கள் வைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் . இது ஏற்கனவே நடை பெற்றுவரும் , பணிகளின் தொடர்ச்சி தான் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர் .