வானாபாடி ஊராட்சி மாணிக்கம் நகரில் ஆபத்தான நிலையில் உள்ளடிரான்ஸ்பார்மரின் கம்பத்தை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
ராணிப்பேட்டை அடுத்த வானாபாடி ஊராட்சிக்கு உட்பட்ட மாணிக்கம் நகரில் 100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அவர்களின் மின் தேவைக்காக அப்பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு மின்வி நியோகம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு உள்ள டிரான்ஸ்பார்மரின் கம்பங்களில் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. 

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தும், எந்தொரு நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் அவ்வழியாக செல்லும் பொது மக்கள் எப்போது விழுமோ என்று அச்சத்தில் சென்று வருகின்றனர். எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன் சம்மந்தபட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொண்டு சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து ஆபத்தான நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மரின் கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.