தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுவாக மரங்கள் அடர்ந்திருக்கும் கிராமப்புறங்களில் வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும். இம்முறை கிராமப்புறங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருப்பதாக மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அவ்வகையில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் தற்போது நிலவிவரும் வெயிலின் தாக்கமானது பாரன்ஹீட் அளவுகளில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. 

அதன்படி ராணிப்பேட்டையில் 106 டிகிரி, அரக்கோணத்தில் 108 டிகிரி, சோளிங்கரில் 108 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவுகளில் வெயில் பதிவானது.