ஆற்காடு பழைய பாலத்தில் டூவீலர் மீது கார் மோதியதில் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக ஒருவர் பலியானார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சென்னை வேலூர் தேசிய நெடுஞ்சாலை ஆற்காடு பழைய பாலத்தில் நேற்று இரவு 11 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த திருவளவயநல்லூர் புதிய காலனியை சேர்ந்த முனுசாமி மகன் சார்லஸ் என்பவர் மீது பின்னால் வந்த கார் மோதியதில் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலே பலி.

சார்லஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து பலியானார் இதுபற்றி தகவல் அறிந்த ஆற்காடு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.