ராணிப்பேட்டை: வரும் 25-ஆம் தேதி மகாவீா் ஜயந்தி, மே 1 தொழிலாளா் தினம் ஆகிய இரு தினங்களும் மதுக்கடைகள், மதுக் கூடங்கள் அனைத்தும் மூடியிருக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுபானக் கடைகளை ஒட்டியுள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஹோட்டல்களில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 25) மகாவீா் ஜயந்தி அன்றும், மே தினத்தன்றும் (மே 1) மதுபானக் கடைகளை மூடி வைக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே மேற்படி தினங்களில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுபானக் கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஹோட்டல்களில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும் என்றும், அன்றைய தினங்களில் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.