கலவை அருகே மரத்தில் மோதி விபத்துக்குள்ளான தனியார் கம்பெனி பஸ். 
கலவை அருகே தனியார் கம்பெனி பேருந்து மரத்தில் மோதியதில் 4 பேர் படுகாயமடைந் தனர். சென்னையில் உள்ள தனியார் கம்பெனி பஸ் நேற்று முன்தினம் மாலை ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த தோனிமேடு கிராமத்தில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு செய்யாறு நோக்கி சென்றது. 

சிறிதுதூரம் சென்ற நிலையில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள் ளானது. இதில் ஓட்டுனர் உள்பட 4 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். 

இதுகுறித்து தகவலறிந்த வாழைப்பந்தல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த 4பேரை மீட்டு மாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத் திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.