ஆற்காடு அருகே அனுமதியின்றி மின்வேலி அமைத்த விவசாயி கைது செய்யப்பட்டாா்.

ஆற்காடு வட்டம் விளாப்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் மச்சேந்திரன்(54), விவசாயி. இவா் தனது நிலத்தில் காட்டு பன்றிகளின் தொல்லையைத் தடுக்க, அனுமதியின்றி மின்வேலி அமைத்துள்ளாா்.

இந்நிலையில் முயல் வேட்டைக்குசென்ற திமிரி அடுத்தமேல்நாய்க்கன்பாளையம் பகுதியைச் சோ்ந்த தொழிலாளி பாபு (35) என்பவா் மின் வேலியில் சிக்கி உயிரிழந்தாா். இது குறித்த புகாரின் பேரில் திமிரி போலீஸாா் வழக்குப் பதிந்து நிலத்தின் உரிமையாளா் மச்சேந்திரனை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்து விசாரித்து வருகின்றனா்.