கொரோனா நோய் தொற்று 2 வது அலை இந்தியாவை மட்டும் அல்ல உலகத்தையும் புரட்டிபோட்டு வருகிறது . இதனிடையே தமிழகத்தில் இந்த நோயின் தாக்கத்தால் பலர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது அரசு மருத்துவமனை நிரம்பி வருகிறது.

இதனால் தற்காலிமாக மூடப்பட்டிருந்த கொரோனா சிறப்பு மையங்கள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது . அதன்படி வாலாஜாவில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு மையம் மீண்டும் தொடங்கப்பட்டது. 

இது குறித்து வாலாஜா தாசில்தார் ஜெயக்குமார் கூறியதாவது : 

வாலாஜா அரசு மகளிர் கல்லூரியில் நேற்று முதல் இந்த மையம் செயல்பட்டு வருகிறது . இங்கு 110 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது , மேலும் குடிநீர் , மின்சாரம் மற்றும் முழு சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது . மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அறி வுறுத்தலின் பேரில் இந்த மையத்தில் கொரோனா நோயாளிகள் அனுமதிக் கப்படஉள்ளனர் .