ராணிப்பேட்டை, தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடந்து முடிந்த நிலையில், வரும் மே மாதம் 2ம் தேதி வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் இரண்டாவது அலை உருவாகி உள்ள சூழலில் அதற்கான முன்னேற் பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத் தில் நடந்தது. 

கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை தாங்கி பேசிய தாவது: 

வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுமதிக்கப்பட்டவர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியாத நபர்களை வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்க கூடாது. வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், வேட்பாளர்களுக்கான முகவர்கள், பொது முகவர், வேட்பாளர்கள் அனை வரும் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். வாக்கு எண்ணும் மையத்தின் நுழைவு வாயிலில் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும். உபயோகப்படுத்திய முகக்கவசங்கள் அப்புறப் படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா தடுப்பு நடவடிக்கை களை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.