ஆற்காடு: ஆற்காட்டில் நடைபெறவிருந்த அரிசி திருவிழா ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில், ஆற்காட்டை அடுத்த தக்கான்குளம் கே.எம்.இயற்கை வேளாண்மைப் பண்ணையில் வரும் 10, 11-ஆம் தேதிகளில் பாரம்பரிய நெல் விதைகள் கண்காட்சி, பாரம்பரிய அரிசி திருவிழா, விற்பனை, கால்நடை கண்காட்சி உள்ளிட்டவை இரண்டு நாட்கள் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள கரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடு காரணமாக இந்த நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டது. நிலைமை சரியானதும் வேறு நாள்களில் அரிசி திருவிழா நடத்தப்படும் என அதன் தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.எம்.பாலு வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா்.