தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு தளர்வுகளுடன் வரும் 30 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது . அதன்படி , ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் டிஆர்ஓ ஜெயச்சந்தி ரன் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது .

கூட்டம் தொடர்பாக கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது : 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று முதல் அனைத்து பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் . வாகனங்கள் இயங்க அனுமதிகிடையாது . 

பொது ஊரடங்குஅமலில் இருப்பதால் வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு அனுமதி கிடையாது . பயணிகளுக்கு உடல் வெப்பம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் . பஸ்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டும் . பால் மற்றும் பத்திரிகை விநியோகம் , மருத்துவமனைகள் , மருத்துவ பரிசோதனை கூடங்கள் , மருந்தகம் , ஆம்புலன்ஸ் , சரக்கு வாகனங்கள் , எரிபொருள் வாகனங்கள் , அமரர் ஊர்தி சேவை ஆகியவை தொடர்ந்து இயங்க அனு மதிக்கப்படும் .

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு பின்பற்றப்படும் . விவசாய விளைபொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படும் . முழு ஊரடங்கு நாளில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் , நண்பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் ஓட்டல்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் . திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் 100 நபர்களுக்கு மிகாமலும் , இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 பேர் மட்டும் கலந்து கொள்ள வேண்டும் . ரத்தினகிரி கோயில் , மகேந்திரவாடி கோயில் , காஞ்சனகிரி மலை போன்ற அனைத்து சுற்றுலாத்தலங்களும் தடை விதிக்கப்படுகிறது . தேநீர் கடைகள் , பலசரக்கு கடைகள் , வணிக வளாகங்கள் இரவு 9 மணி வரை மட்டும் செயல்படும் . கொரோனா தொற்று அறிகுறி தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று உரிய சிகிச்சை பெறவேண்டும் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது .