குறள் : 327
தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை.
மு.வ உரை :
தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிச் செல்வதாக இருந்தாலும் அதைத் தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது.
கலைஞர் உரை :
தன்னுயிரே போவதாக இருப்பினும்கூட அதற்காக இன்னொரு உயிரைப் போக்கும் செயலில் ஈடுபடக்கூடாது.
சாலமன் பாப்பையா உரை :
தன் உயிரையே இழக்க நேர்ந்தாலும், பிற இன்னுயிரை அதன் உடம்பிலிருந்து போக்கும் செயலைச் செய்யவேண்டா.
Kural 327
Thannuyir Neeppinum Seyyarka Thaanpiridhu
Innuyir Neekkum Vinai
Explanation :
Let no one do that which would destroy the life of another although he should by so doing lose his own life
இன்றைய பஞ்சாங்கம்
29-03-2021, பங்குனி 16, திங்கட்கிழமை, பிரதமை திதி இரவு 08.54 வரை பின்பு தேய்பிறை துதியை. அஸ்தம் நட்சத்திரம் பகல் 03.02 வரை பின்பு சித்திரை. சித்தயோகம் பகல் 03.02 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1.
இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
இன்றைய ராசிப்பலன் - 29.03.2021
மேஷம்
இன்று பொருளாதாரம் சிறப்பாக அமையும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். நவீன பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலையில் உங்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகும். சுபகாரிய முயற்சிகள் நற்பலனை கொடுக்கும். மன நிம்மதி ஏற்படும்.
ரிஷபம்
இன்று உத்தியோகத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகலாம். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடையலாம். தெய்வ தரிசனம் மனதிற்கு நிம்மதியை தரும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.
மிதுனம்
இன்று பிள்ளைகள் பெருமை படும் படி நடந்து கொள்வார்கள். உற்றார் உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு தொழிலின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். சேமிப்பு உயரும்.
கடகம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
சிம்மம்
இன்று பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை குறைக்க முடியும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்களின் ஆறுதல் வார்த்தைகள் புது நம்பிக்கையை தரும்.
கன்னி
இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக அமையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிட்டும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொன் பொருள் சேரும்.
துலாம்
இன்று நீங்கள் எதிலும் கவனமாக இருக்க வேண்டிய நாள். எதிர்பாராத செலவுகளால் உங்கள் கையிருப்பு குறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்றே கடின உழைப்பு தேவை. பெரிய மனிதர்களின் அறிமுகம் மகிழ்ச்சியை அளிக்கும். புத்திர வழியில் அனுகூலங்கள் உண்டாகும்.
விருச்சிகம்
இன்று உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். வேலையில் உடன் பணிபுரிபவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
தனுசு
இன்று எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். குடும்பத்தினருடன் இருந்த மனஸ்தாபங்கள் மறையும். சிலருக்கு வியாபார ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
மகரம்
இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படும். எதிர்பார்த்த இடத்தலிருந்து உதவிகள் கிடைக்க தாமதம் ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும்.
கும்பம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் தாமதம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பு ஏற்படும். தொழில் சம்பந்தமாக புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
மீனம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். பொன் பொருள் சேரும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,