குறள் : 301
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கினென் காவாக்கா லென்.

மு.வ உரை :
பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன் பலிக்காத இடத்தில் காத்தால் என்ன காக்கா விட்டால் என்ன?

கலைஞர் உரை :
தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?.

சாலமன் பாப்பையா உரை :
எங்கே தன் கோபம் பலிக்குமோ அங்கே கோபம் கொள்ளாதவனே உண்மையாகவே கோபம் கொள்ளாதவன்; பலிக்காத இடத்தில் கோபத்தைத் தடுத்து என்ன? தடுக்காமல் விட்டுத்தான் என்ன?.

Kural 301
Sellitaththuk Kaappaan Sinangaappaan Allitaththuk
Kaakkinen Kaavaakkaal En?

Explanation :
He restrains his anger who restrains it when it can injure; when it cannot injure what does it matter whether he restrain it or not ?


கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
cell: 0091 7200163001. 9383763001,

இன்றைய பஞ்சாங்கம்
04-03-2021, மாசி 20, வியாழக்கிழமை, சஷ்டி திதி இரவு 09.59 வரை பின்பு தேய்பிறை சப்தமி. விசாகம் நட்சத்திரம் இரவு 11.57 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. 

இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

இன்றைய ராசிப்பலன் - 04.03.2021

மேஷம்
இன்று மாலை 06.20 மணி முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பார்த்த உதவிகள் தக்கநேரத்தில் கிடைக்கும் என்றாலும் நிதானமாக இருப்பது நல்லது. வேலையில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது சிறப்பு. 

ரிஷபம்
இன்று நீங்கள் வேலையில் புது உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். குடும்ப பிரச்சினைகள் படிப்படியாக குறையும். உற்றார் உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.

மிதுனம்
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மன கஷ்டங்கள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கா விட்டாலும் நஷ்டம் இருக்காது. உறவினர்கள் உதவியால் உங்கள் பிரச்சினைகள் குறையும். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

கடகம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் பயணம் உண்டாகும். உறவினர்கள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். சொந்த தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

சிம்மம்
இன்று உங்களுக்கு தாராள பணவரவு உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். தொழிலில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு கொடி கட்டி பறக்கும். உத்தியோகத்தில் தங்கள் திறமைகளை வெளிபடுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலைபளு குறையும்.

கன்னி
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் சற்று மந்த நிலை உண்டாகும். வேலையில் உடனிருப்பவர்களால் சிறு மனசங்கடங்கள் ஏற்படும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களால் அனுகூலம் கிட்டும். தெய்வ வழிபாடு செய்வது நல்லது.

துலாம்
இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார ரீதியாக எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் எளிதில் கைகூடும்.

விருச்சிகம்
இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். வேலையில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. எதிர்பாராத உதவி கிட்டும்.

தனுசு
இன்று நீங்கள் வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சினைக்கு நல்ல தீர்வு ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும்.

மகரம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் தகுதிக்கேற்ற உயர்வு கிட்டும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.

கும்பம்
இன்று உங்கள் பொருளாதார நிலையும், ஆரோக்கியமும் சற்று மந்தமாகவே இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நற்பலன்கள் கிட்டும்.

மீனம்
இன்று உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் கால தாமதமா-கும். உங்கள் ராசிக்கு மாலை 06.20 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பண விஷயத்தில் கவனம் தேவை.