உலகமே உற்று நோக்கி கொண்டு இருக்கிற #suezcanel Blockage பத்தி தான் பாக்க போறோம்.
முதல்ல சூயஸ் கால்வாய் பத்தி பாத்ருவோம்,மத்திய தரைக்கடலையும்(Mediterranean sea) செங்கடலையும்(Red sea) இணைக்கும் பகுதி தான் இந்த சூயஸ் கால்வாய்,ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையிலான சுருக்கமான கடல்வழி இந்த பகுதிதான்,இந்த பகுதியில தினமும் ஐம்பதுக்கும் மேற்பட்ட ராட்ச கப்பல்கள் கடந்து செல்கின்ற முக்கியமான கடல் பகுதி உலக வர்த்தகத்துல 12 சதவீதம் இந்த கால்வாய் மூலம் கடந்து செல்கின்ற கப்பல்கள் மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றது அந்தளவுக்கு இந்த பகுதி ஒரு முக்கியமான கடல் வழி போக்குவரத்துக்கு பகுதி.
இப்ப அந்த இடத்துல தான் ஒரு விபத்து நடந்து இருக்கு எப்பொழுதும் போல அந்த கடற்பகுதியை கடக்க முயன்ற ஒரு கப்பல் அந்த கால்வாய் கடக்கும் பொழுது திடிர்னு அடிச்ச தீவிரமான காற்றால கட்டுப்பாட்டை இழந்து, கப்பலின் முன்பக்கம் கால்வாயின் வடக்கு பக்க கரையில் மோதி திருப்ப முடியாதபடி மாட்டிக்கொண்டது. 
அதே வேகத்தில் கப்பலின் பின் பகுதி மேற்குப் பக்கமாக இழுபட்டு கால்வாயின் மறு கரையில் சென்று மோதி மேற்கொண்டு நகர முடியாமல் இறுகியது,இதனால மற்ற கப்பல்கள் செல்ல முடியாமல் அந்த பாதை அடைபட்டு இருக்கிறது ஒரு நாளைக்கு அந்த பகுதியை கப்பல்கள் கடக்க வேண்டும் இந்த விபத்தினால் மற்ற கப்பல்கள் அனைத்தும் பாதியிலே நின்று கொண்டுஇருக்கிறது அனைத்துமே சரக்கு கப்பல்கள்,விபத்தில் மாற்றி கொண்ட கப்பலை மீட்க சில வாரங்கள் ஆகும்னு சொல்றாங்க..
அடுத்தாத மாற்றி கொண்ட அந்த கப்பல் பத்தி பாப்போம் தைவான் நாட்டை சேர்ந்த Evergreen நிறுவனத்தின் உடைய கப்பல் அது இந்த கப்பலின் மொத்த எடை 2,00,000 டன்.அதேபோல இந்த கப்பல் 2,20,000 டன் கொள்கலன்களை எடுத்துச் செல்லக்கூடியது.இந்த விபத்து நாள 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சரக்கு தேங்கி இருக்குதாம்.