காவேரிப்பாக்கம் காவல் நிலையம் எதிரே ஆபத்தான நிலையில் தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் வாகன ஓட்டிகளுக்கு மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் .
காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் பத்திர பதிவுத்துறை அலுவலகம் , ஊராட்சி ஒன்றிய அலுவலகம் , வேளாண்மை அலுவலகம் , அரசு வங்கிகள் , காவல் நிலையம் மற்றும் தனியார் கல்லூரி உள்ளிட்டவைகள் அமையப்பெற்றுள்ளது . இதன் காரணமாக அத்திப்பட்டு , திருப்பாற்கடல் , வேகாமங்களம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பள்ளி , கல்லூரி மாணவர்கள் , பொது மக்கள் மற்றும் வணிகர்கள் என நாள்தோறும் இங்கு ஏராளாமான பொது மக்கள் வந்து தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு செல்கின்றனர் . 

மேலும் சென்னை , காஞ்சிபுரம் , அரக்கோணம் , வேலூர் , சித்தூர் , ஓசூர் , பெங்களூர் , உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் , கல்லூரி மாணவர்கள் , தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் , இப்பகுதிக்கு வந்து செல்கின்றனர். 

இதனால் பேருந்து நிலையம் , மற்றும் பஜார் வீதி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து அதிகமாக காணப்படும் . இந்நிலையில் காவேரிப் பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் காவல் நிலையம் எதிரே உள்ளிட்ட பகுதிகளில் , பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயலும் போது , உயிரை கையில் பிடித்து கொண்டு கடக்கும் சூழ் நிலை ஏற்பட்டுள்ளது . 

அப்போது தேசிய நெடுஞ்சாலையில் அதிக வேகத்தில் வரும் வாகனங்களால் ஏராளமானோர் விபத்துகளில் சிக்கி படுகாயமடைந்து உயிரிழக்கின்றனர் . மேலும் வாரத்தில் செவ்வாய்கிழமை அன்று நடத்தப்படும் வாரச்சந்தைக்கு அத்திப்பட்டு , திருப்பாற்கடல் , உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது , விபத்துக்கள் நேரிடுகிறது . 

எனவே சாலை விபத்துக்களை தடுக்க , போக் குவரத்து அதிகம் உள்ள காலை மற்றும் மாலை நேரங்களில் போலீசார் போக்குவரத்தைசீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் . அல்லது தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் , பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு மேம் பாலம் அமைக்க பணிக்களை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .