காவேரிப்பாக்கத்தில் போஷன் அபியான் பக்குவாடா திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு பாரம்பரிய உணவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

காவேரிப்பாக்கம் கண்ணாங்குளம் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில் , போஷன் அபியான் பக்குவாடா திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு பாரம்பரிய உணவு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது . ஒருங்கிணைந்த திட்ட அலுவலர் ஷாலினி தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் . 

இதில் பாரம்பரிய உணவுகளான கேழ்வரகு , புட்டு , சத்துமாவு புட்டு , சத்து மாவு உருண்டை , பொட்டு கடலை , முருங்கைகீரை உள்ளிட்ட சத்தான உணவுகள் பார்வைக்கு வைக்கப்பட்டு , பாரம்பரிய உணவுகளை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து கர்ப்பிணிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது .

இதில் , கர்ப்பிணிகள் , அங்கன்வாடி ஊழியர்கள் உமா , தரணீஸ்வரி , சசிகலா உட்பட பலர் கலந்து கொண்டனர் .