ராணிப்பேட்டை , வாலாஜா ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடப்பதாக காட்பாடி ரயில்வே போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சப் - இன்ஸ்பெக்டர் எழில்வேந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர் . அப்போது தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அவ்வழியே வந்த ரயில் மோதி இறந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் , சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர் .