வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த சந்தனரி பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி(22). இவருக்கும் வேலூர் அன்பூண்டி பகுதியைச் சேர்ந்த சிவா என்பவருக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

 
நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நிச்சயம் செய்த நபர் சிவாவுடன் தனலட்சுமிக்கு காதல் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் கடந்த 5ஆம் தேதி தீர்த்தகிரி முருகன் கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இருவரையும் பிரிக்கக் குடும்பத்தினர் முயற்சி செய்து வருவதாகக் கூறி நேற்று வேலூர் எஸ்பி அலுவலகத்தில் பாதுகாப்பு அளிக்கக் கோரி புகார் மனு அளித்தனர்.