ராணிப்பேட்டை மாவட்டம் அவரக்கரை கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீகோதண்டராமர் கோயில் உள்ளது. இக்கோயிலில் சீதை, கோதண்டராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் ஆகியோர் ஒரே கருவறையில் அருள்பாலிக்கின்றனர்.
இந்நிலையில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் 3 நாட்கள் கருவறையில் உள்ள சீதை, கோதண்டராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் மீது சூரியஒளி விழும் அபூர்வ நிகழ்வு நேற்று முன்தினம் நடந்தது.
அப்போது சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 3வது நாளாக இன்று காலையும் சூரியஒளி கருவறையில் உள்ள சுவாமிகள் மீது விழுந்தது. அப்போது சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இந்த அபூர்வ நிகழ்வை பல்வேறு கிராம மக்கள் தரிசனம் செய்தனர்.