மாதனூர் அடுத்த உள்ளி சாலையில் உள்ள பைரவர் கோயிலில் நேற்று பைரவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் .

மாதனூரில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் நடந்தது . ஆம்பூர் நாகநாதசுவாமி கோயிலில் அஸிதாங்க பைரவர் , காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது . இதையொட்டி திரளான பக்தர்கள் தீபமேற்றி வழிபாடு செய்தனர் . 

இதே போல் ஆம்பூர் அடுத்த பைரபள்ளி பைரவர் கோயில் , வட சேரி சோமசுந்தரேஸ்வரர் கோயில் , மாதனூர் அடுத்த உள்ளி சாலை பைரவர் கோயில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பைரவர் வழிபாடு செய்தனர் .