வாணியம்பாடி அருகே உரிய ஆவணங்களின்றி ஆட்டோவில் கொண்டு சென்ற 60 ஆயிரம் மதிப் பிலான அப்பளம் பாக்கெட்டுகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர் . 

வாணியம்பாடி புதூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி காளியப்பன் தலைமையிலான குழுவினர் வாகன தணிக் கையில் நேற்று ஈடுபட்டனர் . அப்போது , அவ்வழியாக வந்த ஆட்டோவை மடக்கினர் . தொடர்ந்து ஆட்டோவை சோதனையிட்டதில் அப்பள பாக்கெட்டுகள் இருந்தது தெரிந்தது . 

மேலும் , திருப்பத்தூர் சி.கே.சி நகர் பகுதியில் இருந்து வீடுகளில் தயாரித்த அப்பள பாக்கட்டுகளை வாணியம்பாடியில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்ய வினோத் என்பவர் கொண்டு வந்தது தெரிந்தது . 

ஆனால் , உரிய ஆவணங்கள் இல்லாததால் 60 ஆயிரம் மதிப்பிலான அப்பள பாக்கெட்டுகளை ஆட்டோவுடன் பறிமுதல் செய்யப்பட்டது . தொடர்ந்து , தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது .