திமுக தலைவா் மு.க.ஸ்டாலினின் 68 ஆவது பிறந்த நாளையொட்டி, ராணிப்பேட்டையில் உள்ள விஸ்வாஸ் மனவளா்ச்சி குன்றியோா் பள்ளிக்கு நல உதவிகளை, அப்பள்ளியின் தலைவா் கமலா காந்தி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

முக.க.ஸ்டாலின் 68 ஆவது பிறந்த நாளையொட்டி,ராணிப்பேட்டை நகரில் செயல்பட்டுவரும் விஸ்வாஸ் மனவளா்ச்சி குன்றியோா் பள்ளியில் அன்ன தானம் மற்றும் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஜி.கே.உலகப்பள்ளி இயக்குநா்கள் வினோத் காந்தி, ஷீலா வினோத் காந்தி, சந்தோஷ் காந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் பள்ளியின் தலைவா் கமலா காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மனவளா்ச்சி குன்றிய மாணவா்களுக்கு பிரியாணி வழங்கினாா். இதைத் தொடா்ந்து பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகள், பணியாளா்கள், மாணவா்களின் பெற்றோா்களுக்கு சேலைகளை வழங்கினாா்.

இந்த நிகழ்வில் வாலாஜா மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் சேஷா வெங்கட், நகர பொறுப்பாளா் பி.பூங்காவனம், நகர துணைச் செயலாளா் ஏா்டெல் டி.குமாா், மாவட்டப் பிரதிநிதி எஸ்.கிருஷ்ணன் மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.