ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று தமிழக சுகாதாரத் துறையால் வெளியிடப்பட்ட கொரோனா தொற்று அறிக்கையின்படி, புதியதாக 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 16, 475 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்த நபர்களில் இதுவரை 16, 149 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மருத்துவமனைகளில் 136 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை, மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக தொற்றினால் 190 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.