ராணிப்பேட்டை நகருக்குள் வராமல் பைபாஸ் சாலை வழியாக சென்ைைன செல்லும் அனைத்து அரசு பேருந்துகளும் நகருக்குள் வந்து நின்று செல்ல வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை நகரம் தலை சிறந்த நகரங்களில் ஒன்றாகும் . சட்டமன்ற தொகுதி ஆகும் . இங்கு மிகப்பெரிய நிறுவனமான பெல் நிறுவனம் , சிப்காட் 1 , 2 , 3 , போன்ற 3 பகுதிகள் உள்ளன . மேலும் இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோல் , ரசாயனம் , ஷூ , இரும்பு , பிளாஸ்டிக் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன .

இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட் டம் புதியதாக தொடங்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றது . புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் , கோட்டாட்சியர் அலுவலகம் , ஒருங்கிணைந்த நீதி மன்றவளாகம் , டிஎஸ்பி அலவலகம் , 4 காவல் நிலையங்கள் , நகராட்சி அலுவலகம் , வட்டார போக்குவரத்து அலுவலகம் , கால் நடை நோய தடுப்பு மருந்து தயாரிக்கும் நிலையத்தில் புதிதாக T118 கோடியில் புதியதாக கட்டப்படும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் , சிறுவர் சீர்திருத்தப்பள்ளி , மாவட்ட ஆயுதப்படை அலுவலகம் , 2 அரசினர் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் , 2 தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் , 2 அரசினர் மேல் நிலைப்பள்ளிகள் , 4 தனி யார் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன.  மேலும் இங்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் . 

இந்நிலையில் கடந்த 1970 ம் ஆண்டில் ராணிப்பேட்டையில் ₹ 35 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது . பழைய பேருந்து நிலையத் தில் 2 இடங்களில் தலா 110 லட்சம் செலவில் பேருந்து நிறுத்தங்கள் கட்டப்பட்டன . இதனை தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி சார்பில் 165 லட்சம் மதிப்பீட்டில் முத்துக்கடை பேருந்து நிலையம் கட்டப்பட்டது . ஆனால் மேற்கண்ட 3 பேருந்து நிலையங்களில் சென்னை- வேலூர் , வேலூர்- சென்னை செல்லும் அனைத்து அரசு பேருந்துகளும் ராணிப்பேட்டையில் உள்ள பழைய புதிய மற்றும் முததுக்கடை பேருந்து நிலையங்களுக்குள் வந்து செல்லாமல் ராணிப்பேட்டை பைபாஸ் சாலையிலேயே சென்றுவிடுகிறது. 

பயணிகள் , பொதுமக்கள் , குறிப்பாக கர்ப்பிணிகள் , வயதானோர் என அனைவரும் பஸ் கிடைக்காமல் அவதி அடைகின்றனர் . பயணிகள் உள்பட  அனைவரும் ராணிப்பேட்டையிலிருந்து வாலாஜா அல்லது ஆற்காடு நகரங்களுக்கு 50 அல்லது 100 கொடுத்துவிட்டு செல்கின்றனர் . 

அங்கிருந்து பின்னர் சென்னை , வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர் . எனவே ராணிப்பேட்டை நகரை தவிர்த்து பைபாஸ் சாலையிலேயே செல்லும் அரசு பேருந்துகள் அனைத்தும் ராணிப்பேட்டை நகருக்குள் வந்துசெல்ல சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை நிர்வாகம் , ஆற்காடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் , பொதுமக்கள் , சமூக ஆர்வலர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர் . எனவே சம்பந்தப்பட்ட அதிகாரி கள் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .