ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்
சவுதி சென்ற பெண் செவிலியர் விபத்தில் படுகாயம் மீட்கக்கோரி கலெக்டரிடம் பெற்றோர் மனு 

சவுதியில் விபத்தில் சிக்கிய தங்களது மகளை மீட்டுத்தரக்கோரி நேற்று ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் பெண் செவிலியரின் பெற்றோர் குடும்பத்துடன் வந்து மனு அளித்தனர் .

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டம் , காவனூர் கிராமத்தைச் சேர்ந்த குமார் மற்றும் குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது : எனதுமகள் ரோமியா செவிலியர் படிப்பு முடித்த நிலையில் , ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் மூலமாக கடந்த பிப்ரவரி மாதம் 1 ம் தேதி செவிலியராக வேலை செய்ய சவுதி நாட்டிற்கு சென்றார் .

கொரோனா பரவல் காரணமாக அங்கு 25 நாட்கள் ரியாத் என்கிற இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டார் . பின்னர் , அங்கிருந்து கடந்த 28 ம் தேதி செவிலியர் பணியில் சேருவதற்காக ஜெந்தா என்ற இடத்திற்கு வேனில் அழைத்துச் செல்லப்பட்டார் . அப்போது எதிர்பாராத விதமாக வேன் விபத்தில் சிக்கியது . 

இதில் எனது மகள் ரோமியா பலத்த காயமடைந்து அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டு வருவதாக வேலைக்கு அழைத்துச் சென்ற நிறுவனத் தின் மூலமாக தகவல் கிடைத்துள்ளது .

இதனால் எங்கள் குடும்பத்தினர் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர் . எனவே , சவுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் , எனது மகளை பத்திரமாக மீட்டுத்தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் . இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது .