வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த முதியவரிடம் பிக்பாக்கெட் அடித்துத் தப்பி சென்ற நபரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

 
வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அருண் ஓட்டல் முன்பு மாறியதாக நகரைச் சேர்ந்த முதியவர் இருதயராஜ் நின்று கொண்டிருந்தபோது பாக்கெட்டிலிருந்து 500 ரூபாய் பணத்தை இளைஞர் ஒருவர் பிக்பாக்கெட் அடித்துத் தப்பி ஓடியுள்ளார்.

போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் பிக்பாக்கெட் அடித்த நபர் அகரம் தெருவைச் சேர்ந்த சூர்யா என்பது கண்டுபிடிக்கப்பட்டு அவரைப் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 500 ரூபாயை பறிமுதல் செய்து இருதயராஜ் இடம் போலீசார் ஒப்படைத்தனர். தொடர்ந்து பிக்பாக்கெட் அடித்த நபரைச் சிறையில் அடைத்துள்ளனர்.