ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளராக சுகுமார் அறிவிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வாணாபாடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அர்ஜுன்ன் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் வாலாஜா நகராட்சி அலுவலகம் முன்பாக திரண்டனர் பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தொண்டர்கள் இளமதி,வெங்கடேசன் இருவரும் தங்கள் மீது மண்ணெண்ணெயை ஊற்றிகொண்டு தீகுளிக்க முயற்சித்தனர். உடனே, அங்கிருந்தவர்கள் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி தடுத்தனர் இச்சம்பவம் குறித்து தகவலறிந்துசம்பவ இடத்திற்கு வாலாஜா போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியதின்பேரில் அமைதியடைந்து கலைந்து சென்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை எற்படுத்தியது மேலும் சாலைமறியலால் சுமார் 1மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது