பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று தான் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் தற்போது ஜூன் 30ஆம் தேதி வரை கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
மேலும் கொரோனா பரவல் காரணமாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.