பாணாவரம் ,அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது இளம் பெண் . இவர் வாலாஜா வில்உள்ள கல்லூரியில் இளங்கலை 2 ம் ஆண்டு படித்து வருகிறார் . இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் இளம்பெண் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் தூங்க சென்றுள்ளனர் .
அதிகாலையில் எழுந்த இளம் பெண் , தன் தாயிடம் கழிவறைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் , வரவில்லையாம் . இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை நண்பர்கள் , உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை . இது குறித்து மாயமான இளம் பெண்ணின் தந்தை பாணாவரம் போலீசில் புகார் செய்தார் .
அதில் , ' போளிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஒரு வாலிபர் எனது மகளை கடத்திச் சென்றிருக்கலாம் என்று சந்தேகம் எழுந் துள்ளது ' என தெரிவித் துள்ளார் . அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன இளம் பெண்ணை தேடி வரு கின்றனர் .