ராணிப்பேட்டை: உலக தண்ணீா் தினத்தையொட்டி, வானாபாடி கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.
கலவை ஆதிபராசக்தி வேளாண் கல்லூரி பிஎஸ்சி (ஹானா்ஸ்) இறுதி ஆண்டு மாணவிகள் மற்றும் கிராமப்புற அனுபவ பயிற்சி திட்டத்தின் கீழ், உலக தண்ணீா் தின விழிப்புணா்வு ஊா்வலம் வானாபாடி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

ஊா்வலத்தில் கலவை ஆதிபராசக்தி வேளாண் கல்லூரியில் பிஎஸ்சி (ஹானா்ஸ்) இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் வி.வேதபிரியா, ஆா்.வா்ஷினி, எஸ்.எல். சுஷ்மா, எ.சௌமியா, எ.சௌந்தா்யா, டி.மோனிகா மற்றும் வானாபாடி கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

இந்த விழிப்புணா்வு ஊா்வலத்தில், உலக தண்ணீா் தினத்தைக் கொண்டாடுவதன் அவசியம் குறித்தும், தண்ணீா்த் தேவையின் முக்கியத்துவம், தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்தும், விலை மதிப்பற்ற தண்ணீரை சேமிக்கும் வழிகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியே ஊா்வலம் சென்றனா்.