ராணிப்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து 1,330 டன் உரம் சட்டீஸ்கருக்கு புறப்பட்டு சென்றது . 
ராணிப்பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் பூச்சி மருந்து தொழிற்சாலையில் , கழிவறை உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ரயில்வே துறையிடம் முன் அனுமதி பெற்று முதல் கூட்ஸ் ரயில் ஓட்டம் ஜனவரி 21 ல் துவங்கியது. 

இந்தநிலையில் ராணிப்பேட்டை ரயில் நிலையத்தி லிருந்து நேற்று சரக்கு ரயில் 21 பெட்டிகளில் 1,330 டன் விவசாய நிலத்திற்கான அடி உரம் ராணிப்பேட்டை தனி யார் உரக்கம்பெனியிலிருந்து தயாரிக்கப்பட்டு நேற்று மாலை சட்டீஸ்கர் மாநிலம் சில்லேரிக்கு புறப்பட்டு சென்றதாக ரயில்வே ஸ்டேஷன் சீப் கூட்ஸ் கிளார்க் ஹரி தெரிவித்தார் .